Page:முல்லைப் பாட்டு.pdf/50

From Wikisource
Jump to navigation Jump to search
This page has not been proofread.

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. ள்க்கு இடையில் தலை மகனுக்கு ஒரு தனி வீடு சமைக்கப் பட்டமையுங் கூறுகின்றார். வலியவில்லை நிலத்திற் சுற்றிலும் ஊன்றி, அம்புப் புட்டிலை அதில் தொங்கவிட்டுப் பின் அவ்விற்களையெல்லாங் கயிற்றில் தொடுத்துக்கட்டி வளைத்துச்செய்த இருக்கையில், நீண்ட குந்தங்கோல்களை ஊன்றி அவற்றின்பாற் படல்களை நிரைத்துச் செய்த வில்லரணங்களே சுற்றுக்காவலாக அவற்றின்கண் உள்ள பல வேறு படைகளின் நடுவிலே, தலைவனுக்கென்று பல நிறமுடைய மதிள் திரையை வளைத்துச்செய்த வீட்டின் அமைப்புக் கூறினார். அதன்பின் அங்ஙனம் வகுக்கப்பட்ட தலைமகனிருக்கையில் அழகிய மங்கைப்பருவத்திளைய பெண்கள் சச்சிலே கட்டப்பட்ட திண்ணியவாளினை உடையராய் நெய்யைக்க் கக்குகின்ற திரிக்குழாயினாலே குறையுந்தோறுந் திரியைக் கொளுத்தி எரித்தவண்ணமாய்த் தங்கையில் விளக்கு ஏந்திக்கொண்டு நிற்கின்றார்கள்; குதிரை முதலியன உறங்குதலின் அவற்றின் கழுத்திலே கட்டப்பட்ட மணியின் ஓசையும் அடங்கிப்போன நடு யாமத்தில் மெய்க்காப்பாளர் தூக்க மயக்கத்தால் அசைந்து அசைந்து காவலாகச் சுற்றித் திரிகின்றார்கள்; இங்ஙனம் நடுயாமம் ஆதலும், பொழுது ஆளந்தறிவோர் தலைவன் எதிரே வந்துநின்று வணங்கி வாழ்த்திக் கடாரத்து நீரிலேயிட்ட நாழிகை வட்டிலாற் பொழுது இவ்வளவாயிற்றென்று அறிவிக்கின்றார்கள்; அதனைக் கேட்டவுடன் அரசன் எழுந்து, யவனர்களாலே புலிச்சங்கிலிவிட்டு அழகிதாக நிருமிக்கப்பட்ட இல்லின் உள்ளே விளக்கங்காட்டப்படச் சென்று, வலிய கயிற்றால் இடையிலே திரையை மறித்து வளையக்கட்டி முன் ஒன்றும் பின் ஒன்றுமாய் இரண்டாக வகுக்கப்பட்ட பள்ளி அறையிற்போய்ப் படுக்கையில் அமர்ந்திருக்கின்றான்; அங்ஙனத் தலைவன் பள்ளிக்கொள்ளும் உள்ளறையின் முன் திரைக்குப் புறத்தேயுள்ள வெளியறையிலே சட்டையிட்ட மிலேச்சரில் ஆமைகள் தலைவன் பள்ளியறையைச் சூழ்ந்து இருக்கின்றார்கள்; அரசனோ நா