Jump to content

Page:முல்லைப் பாட்டு.pdf/49

From Wikisource
This page has been proofread.

பொருட்பாகுபாடு

  வந்த நற்சொல்லானும் நின்தலைவன் தான் எடுத்துச்சென்ற
  போர்வினையைக் கடுகமுடித்து இப்போதே வந்துவிடுவான்
  என்று துணிகின்றோம்;ஆதலால் மாயோய்!நீ வருந்தாதே"
  என்று அம்முது பெண்டிர் பலகாலும் வற்புறுத்தி ஆற்றுவிக்
  கவும் ஆற்றுமல் தன் கண்களில் நீர் முத்துப் போல் இடையே
  ருந்து துளிப்பத் தலைமகன் மிகவும் வருந்துகிறான்.
      உச முதல் எஅ-வரி வரையில்.பாட்டின் பொருட்காட்சி
      தலைமகன் பாசறையிலிருக்கும் இருப்புக்கு மாறுகின்றது;
      உச முதல் உஅ-வரி வரையில் பாசறையின் அமைப்பு.
  இனி வேனிற்காலத் துவக்கத்திற் பசைமேற் சென்ற
  தலைவன்,பகைவர் தம் நகரத்திற்கு காவலாக அமைத்த
  அகன்ற பெரிய காட்டிலுள்ள பிடவங்கஞக்செடிகளையும் பசிய
  தூறுகளையும் வெட்டி,வேட்டுவர் அரண்களையும் அழித்து,
  முட்களே மதிலாக வளைத்து கடலைபோல் அகலமான
  பாடி வீடு அமைத்தமை சொல்லபடுகின்றது.
     உரு-முதல் ஏக-வரையில்,பாடி வீட்டினுள் அமைதிகளும்,
     தலைமகனுடைய உடம்புநிலே உள்ளநிலைகளும்
     மிக நுணுக்கமான எடுத்துச் சொல்லபடுகின்றன,
  இனி இங்ஙனம் அமைக்கப்பட்ட பாடி வீட்டினுள்ள
  தழைகள் மேல்வேயிந்த கூரைகள் ஒழுங்காக இருக்குத் தெரு
  வில் நாற்சந்தி கூடும் முற்றத்திலே காவலாக நின்ற யானை
  கரும்போடு நெருங்க கட்டிய நேர்கதிரினையும் அதிமது
  ரத் தழயினையும் உன்னுமல் அவற்றினுள் நேற்றியைத்
  துடைத்துக்கொண்டும்,கொம்பிலே தொங்கவிட்ட தும்பிக்
  கையிற் கொண்டும் நிற்றலால் அவ் யானைபாகர் அங்குசத்
  தார் குத்தியும் வடசொற்களால் அதட்டியும் கவனம் ஊட்டு
  கின்றர்ள்.
      இனி,அப்படி வீட்டினுட் பல்வகை படைகளும்
  இருப்பதற்கு அமைக்கப்பட்ட அரண்களையும் அவ்வணக்