Page:முல்லைப் பாட்டு.pdf/64

From Wikisource
Jump to navigation Jump to search
This page has not been proofread.

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

மேல் எடுத்துச்சென்ற ஷேந்தன் படைத்தலைவர் பகைப்புலத்திற்கு அரணாய் அமைந்த முல்லைக்காட்டிலே பிடவஞ்செடிகளையும் தாறுகளையும் வெட்டி,அங்குள்ள வேடரின் காவற்கோட்டைகளையும் அழித்து,முன்னாலே மதில் வளைத்து அகலமாய்ச்சனமைத்த பாசறை என்க.

இங்கே கண்பர் திருச்சிற்றம் பலம் பிள்ளையவர்கள் தாம் எழுதிய முல்லைப் பாட்டு விளக்கவுரையில் பகையரசன் பாடி வீட்டில் இருக்கும் இருப்பும்,எடுத்துச்சென்ற வேந்தன் பாடி வேட்டில் இருக்கும் இருப்புமாக இரண்டு பாசறை வருணிப்பு இதன்கட் சொல்லப்பட்டதெனக் கொண்டு சில எழுதினார்கள். நச்சினார்க்கினியர் உரையிலாதல் நப்பூதனார் பாட்டிலாதல் அங்ஙனம் இருவகைப்பாசறையிருப்புச் சொல்லப்பட்டதில்லாமையால் அவர் கூறியது பொருந்தாவுரை என்க.

காண்யாறு தழீஇய அகல் கெடும்புறவு-காட்டாறு பொருந்திய அகன்று நீண்ட முல்லைக்காடு. சேண்காறு-நெடுந்தூரம் மணங்கமழும்;இவ்வடை மொழியைப் 'பைம்புதல்' என்பதனோடு கூட்டியுமுரைத்தல் ஆம். எருக்கி - வெட்டி. புழை அருப்பம்-வாயில் அமைந்தகோட்டை. 'இடுமுட்புரிசை' முள்இடுபுரிசை எனமாற்றுக; புரிசை-மதில். 'ஏமம் மு.று, ஈறு குறைந்த எமுறு எனவாயிற்று;ஏமம்-காவல். படுநீர்ப்புணரி-திரையொலிக்கின்ற கடல்.

இப்பாசறையின் உள்ளுள்ள தெருக்களின் நாற்சந்தி கூடும் முற்றத்தில் காவலாகநின்ற மதயானை, கரும்போடு கதிரும் நெருங்கக்கட்டிய அதிமதுரத்தழையினை உண்ணாமல்,அவற்றால் தனது நெற்றியைத்துடைத்துக் கொம்பிலே தொங்கவிட்ட தன் புழக்கையிலே கொண்டு நின்றதாக. பாகர் பரிக்கோலினாற் குத்தி வடசொற்கூறிக்கவளம் ஊட்ட என்க.

உவலைக்கூரை-தழைகன் வேய்ந்த கூரை; கூடாரத்தில் மறவர் இருத்தற்காக அறை அறையாக வகுத்து மேலே தழை.