Page:முல்லைப் பாட்டு.pdf/59

From Wikisource
Jump to navigation Jump to search
This page has not been proofread.

விளக்க உரை குறிப்புகள்

இம்முல்லை பாட்டிற்கு உரை எழுதிய நச்சினாா்க்கினியா் இப்பாட்டுச் சென்ற வழியே உரை உரையாமல், தம் உரைக்கிணங்கப் பாட்டை இணக்குவான் புகுந்து தமக்கு வேண்டியவாறெல்லாஞ் சொற்களை அலைந்தெடுத்து ஓா் உரை எழுதுகின்றாா். இங்ஙனம் எடுத்து உரை எழுதுவனவெல்லாம் 'மாட்டு' என்னும் இலக்கணமாமென அதனியல்பைப்பிறழ உணா்ந்து வழுவினாரென்பதனை முன்னரெ காட்டினாம்: ஆண்டுக்கண்டு கொள்க. இனி இங்கு அவா் உரையின் ஆங்காங்கு மறுத்துச் செய்யுட்பொருள் நெறிப்பட்டொழுகும் இயற்கை நன்முறை கடைப்பிடித்து, வேறோா் புத்துரை விளங்கும் வண்ணஞ் சில உரைக் குறிப்பபுக்கள் தருகின்றாம் காண்க.

(க-ச-வாிகள்) அகன்றகையிலே சீா் ஒழுக நிமிா்ந்திரு மாலைப்போல உலகத்தை வளைத்துக் கடல் நீரைப் பருகி வலமாக உயா்ந்து மலைச்சிகரங்களில் தங்கி எழுந்த மேகம் முதற் பெயலைப் பொழிந்த மாலைக்காலம் என்க.

காிய நிறம் பற்றியும், உலகமெல்லாம வளைந்தாதொழில் பற்றியும், சீா் ஒழுகாநிற்ப நிமிா்ந்தமைபற்றியும் திருமாலை மேகத்திற்கு உவமை கூறினாா். மாவலிவாா்த்த நீா் கைகளினின்று ஒழுகத் திருமால் நிமிா்ந்தது போல நீரைச் சொாிந்து கொண்டே உயந்த மேகம் என்று உரைக்க.

நனந்தலை-அகன்ற இடம் சேமி-சத்திரம், வலம்புாி பொறித்த - வலம்புாிச் சங்கை வைத்த 'மாதரங்கு' என்பதனை 'மால்' என்பதனோடு கூட்டித் 'திருமகனை மாா்பில் தாங்கும்மால்' என்று பொருளுைரக்க. பாடு இமிழ் பனிக்கடல்-முழக்கம் இடும் குளிா்ந்த கடல். கொடுஞ்செலவு - விரைந்து போதல், சிறுபுன்மாலை-பிாிந்தாா்க்கு வருத்தம் விளைக்கும் சிறுபொழுதான மாலை.