Page:முல்லைப் பாட்டு.pdf/58

From Wikisource
Jump to navigation Jump to search
This page has not been proofread.

முல்லைபாட்டு ஆராய்ச்சியுரை களை நிமீத்தங்கேட்டு அறியலாம் என்று நம்பினர்.பகைவர் மேற்சென்ற அரசர் காட்டிற் பாடிவீடு அமைப்பது வழக்கம்.யானைபாகர் யானைகளை வடகாட்டு சொற்களால் பழக்கிவந்தனர்.அரசன் போசெல்லும்போது பெண்களும் வாழ்வரிந்த கச்சுடனே சென்று பாடிவீட்டில் உபசரித்தனர்.கடாரத்து நீரிலே இட்ட நாழிகை வட்டிலாற் பொழுது அறிவந்தனர்.கிரீசு முதலான அயல்நாடுகளிலுள்ள யவனர் என்னும் சிற்பிகள் வரவழைத்து அருமை மிக்க பல்சிற்பவேலைகள் செய்து வந்தனர். இவ்வாறே சீவகசிந்தமணியிலும் "தம்புலன்களால் யவனர் தாட்படுத்த பொறியே" என்று இவர்கள் குறிப்பிட்டுள்ளமை காண்க.மிலேச்சதேசத்திலுள்ள ஊமைகளை வருவித்து தமிழரசர் தம் பள்ளியறைக்கு அவர்களை காவலாக இருந்தனர்; ஊமைகள் அல்லாரை அங்குவைப்பின் அரசன் பள்ளியறைக்கண்ணவான மறைபொருள் நிகழ்ச்சிகளை அவர்கள் வெளிவிடுவதர்கெனவும், ஒருவரொடுருவர் சிற்சிலபொழுது கூடி முணுவென்று பேசுதலுஞ் செய்வராதலால் அதனால அரசன் துயில்கெடுமெனவும் கருதிப்போலும் ஊமைகள் அங்ஙனம் பள்ளியறை காவலாக இருத்தப்படுவாராயினர்!இன்னும் எழடுக்குமாளிகை முதலான உயர்ந்த கட்டிடங்களும்,இன்பம்நுகர்தற்குரிய பலவகையான அரும்பண்டங்களும், யானை தேர் குதிரை காலனான் முதலான நால்வகைபடைகளும் பிற வளங்களும் பழந் தமிழ்நட்டு மன்னர் உடையராய் இருந்தனரென்பதும் பிற்வும் இனிது விளங்குகின்றன.