Page:முல்லைப் பாட்டு.pdf/54

From Wikisource
Jump to navigation Jump to search
This page has not been proofread.

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.

    இட்ட நாழிகை வட்டிலைப் பார்த்துவந்து அரசன் எதிரிலே   
    இடையாமம் ஆயிற்று என்றலும்,யவணர்களாற் புலிச்சங்கிலி
    விட்டு மிக அழகியதாக நிருபிக்கப்பட்ட பள்ளியறையுன் அவர்
    கள் விளக்குக்காட்டச் சென்று அரசன் பள்ளிகொண்டிருத்த
    லும், அப்போது ஊமை மிலேச்சர் பள்ளியறையைச் சுற்றிக் 
    காவலாக இருந்தலும்,படுக்கைமேல் உள்ள அரசன் மறு 
    நாட் போரை விரும்பும் உள்ளத்தோடு தூக்கம் பெருனுய்,
    முன்னுட் போரிற் புண்பட்ட யானை குதிரைகளையும் செ  
    சோற்றுக்கடன் கழித்து இறந்த அரியபோர்வீரரையும் 
    நினைத்து வருந்தி,ஒரு கையை மெத்தையின்மேலும் மற்று 
    ஒரு கையைத் தலையின்கீழும் வைத்துப் படுத்திருத்தலும், 
    தலைமகள் ஏழடுக்குமாளிகையில் தன் கணவன் வருகையை
    நினைத்து பிரிவின் துன்பத்தை ஆற்றிக்கொண்டு புதுமை
    யின் கையிலுள்ள விளக்கானது எரிய மாளிகையின் கூடல்
    வாலிலே வந்துவிழும் நீர்த்திரள் ஒலிப்ப மயில்போற் படுத்
    திருந்தலும்,அப்போது தலைவன் தன் றேரினை விரைவாகச்
    செலுத்திக்கொண்டு காட்டிலே வருதலும் நாம் நேரே காண் 
    கின்றதுபோலவும்,படம் எழுதி நங்கண்ணெதிரே காட்டி
    னுற்போலவும் மிக்க அழகுடன் சொல்லப்படுதல் காண்க.
       இனி இவ்வாசிரியர் தாம் புனைந்துரைக்கும் பொருள்களின் உள்ளே 

நுழைந்து அவற்றை விரிவாகப்புனைந்துரைக்கின்றரென்பதும் ஈண்டு அறியற்பாற்று; இவ்வியற்கை பத்துப் பாட்டுக்கள் இயற்றிய புலவர் எல்லாரிடத்தும் பொதுவாகக் காணப்படுவதொன்ரும்.ஆயினும்,இவரை யொழிந்த ஏனையப்புலவரெல்லாரும் நம் மனொபாவக வுணர்ச்சி சலிப்படையா வண்ணம் விரித்துப் புனைந்து சொல்லுதற்கு இசைந்த நன் பொருள்களையே விர்த்துரைக்கின்றர்கள்; மற்றுஇவரோ புனைந்துரை விரிப்பதாற் சுவையுண்டாகாத ஒரோவொன்றனையு சிறிது அகலவிரித்துக் கூறுகின்றர்;மாடிவீடு அமைக்கப்பட்டதன்மையினை இவர் இன்னு சிறிது சுருக்கிக் கூறியிருந்தால் இப்பாட்டு இன்னும் பொருட்சுவை முதிர்ந்து.