Page:முல்லைப் பாட்டு.pdf/52

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread.

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

"லைத் தவறியதாய் முடியுங்கொகலோ" என்று கெடுக நினைந்து பார்த்துத் தன்னைத் தேற்றிக்கொண்டும்,கழன்றுவிழுகின்ற வளையைக் கழலாமற் செறித்தும் ,ஆற்ணூமமை யுணர்வும் அத னைத் தேற்றுகின்ற உணர்வும் ஒன்றுசேர்தலால் அறிவு மயங்கியும்,அவ்வறிவு மயக்கத்தால் பெருமூச்செறிந்து நடுங் கியும்,அந்நடுக்க்த்தால் செறித்த அணி கலங்கள் சிறிது கழ லப்பெற்றும் ஏழுடுக்கு மாளிகையில் பாவை விளக்கு எரியக் கூடல் வாயில் நீர் சொரியும் ஒசை காதில்விழ இம்மாலைக் காலத்திற் படுக்கையிற் கிடக்கின்ருள்.

அகூ-முதல் கடைசி வரையில் தலைவன் மீண்டு வருதலும், நாட்டிள் மழைகால வருணனையும்.

இனித் தலைமகன் தன் மாற்ருரையெல்லாம் வென்று பகைப் புலத்தைக் கவர்ந்துகொண்ட பெரும்படையோடு வெற்றிக்கொடியை உயரத்தூக்கி ஊதுகொம்பும் சங்கும் முழங்கவும், காசாஞ்செடிகள் நீலமலர்கலைப் பூக்கவும், கொன் றைமரங்கள் ப்பொன்ப்போல் மலரவம், காந்தள் அழகிய கை போல் விரியவும், தோன்றிப்பூச் சிவப்பாக அலரவும், வரகங் கொல்லையில் இளமான்கள் தாவியோடவும், கார்காலத்து முற்றுங் காயிலையுடைய வள்ளிக்காடு பின்போகவும் முல்லை நிலத்திலே மீண்டுவரும்போது அவனது தேரிற் கட்டிய குதிரை கனைக்கும் ஒசையானது ஆற்றிக்கொண்டு அங்ஙனம் கிடக்குந் தலைமகள் செவியிலே நிறைந்து ஆரவாரித்தது.

            பாட்டின் பொருள் நலம் வியத்தல்

கடலில் முகந்தநீரைப் பொழிந்துகொண்டே எழுந்து உயர்ந்த கரியமேகத்திற்கு, மாவலிவார்த்த நீர் ஒழுகுங் கை யுடன் ஒங்கி வளர்ந்த கரிய திருமலை உவமை கூறியது மனேபாவகத்திற்கு இசைந்த உன்மையாகப் பொருந்தியிருக் கின்றது, நிலத்தில் ஊன்றிய வில்லிலே அம்பனுத்தூணி