Page:முல்லைப் பாட்டு.pdf/66

From Wikisource
Jump to navigation Jump to search
This page has not been proofread.
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

  பட்ட நிறத்தினையுடைய திரையை உணர்த்தியது ஆகுபெயரால்.

      (சரு - சுகு) வாளினைத் தமதுகக்சிலே சேரக்கட்டின மங்கையர் தங்கையிலே விளக்கு ஏந்தி, அது குறையுந்தோரும் திரிக்குழாயினுள் அதனைக்கொளுத்த என்க.

       இதற்கு இவ்வாறன்றி மங்கையர் கையிலுள்ள விளக்கினைத் திரிகுழாயையுடைய சிற்றுட்கள் கொளுத்த என்றுரைபின் 'மங்கையர்' என்னுஞ்சொல் தழுவும் வினையின்றி நின்றுவற்றுமாகளின் அப்பொருள் பொருந்தா தென்க.

       தொடி - கைவளை; இப்பொருட்டாதல் "கங்கணங் கைவளை யொருபலங் தொடியே" என்னும் பிங்கலந்தையிற் காண்க. புறம் - முதுகு. இரவைப் பகலாக்கும் வலியபிடியமைந்த ஒளியுள்ளவாள். விரவு - சேர்ந்த. வரிக்கச்சு - வரிந்து கட்டப்பட்ட இரவிக்கை. குறுந்தொடி யணிந்த முன் கையினையும் கூந்தலசைந்து கிடக்குஞ் சிறு புறத்தினையு முடைய மங்கையர், வாள் விரவ வரிந்து கட்டின கச்சை யணிந்த மங்கையர், என அடைமொழிகளை இருகாற் பிரித்துக் கூட்டுக. சுரை - திரிக்குழாய், நந்துதொறும் - குறையுந்தோரும்.

      (ரூய - ருசு) மணியினேசையும் அடங்கிய நள்ளிரவில், அசையும் புனலிக்கொடி யேறிய சிறி தூறுகள் துவலையோடு வந்து அசையுங் காற்றினுள் அசைந்தாற்போலத் தூக்க மயக்கத்தால் அசைதலையுடைய மெய்க்காப்பாளர் காவலாகச் சுற்றித் திரிய வென்க.

      நெடுநா வெண்மணி - நீண்ட நாக்கினையுடைய வெள்ளியமணி. நிழத்திய - நுணுகிய; அதாவது முன்னுள்ள ஓசை அடங்கிய; இச்சொல் நுணுக்கப்பொருளை யுணர்த்துதல் "ஒய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய், ஆவின் நான்கும் நுணுக்கப்பொருள" என்னுந் தொல்க்கப்பிய உரியியற் சூத்திரத்திற் காண்க; என்றது குதிரை யானை என்றற் றெடக் கத்தனவும் உறங்குதலின் அவற்றின் கழுத்திற் கட்டிய மணி.