Jump to content

Page:முல்லைப் பாட்டு.pdf/45

From Wikisource
This page has not been proofread.

         முல்லைப்பாட்டு
வேட்டுப் புழை யருப்ப மாட்டிக் காட்ட
விடுமுட் புரிசை யேமுற வளைஇப்
படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி
யுவலைக் கூரை யொழுகிய தெருவிற்
கவலை முற்றங் காவனின்ற
தேம்படு கவுன சிறுகண் யானை
யோங்கு நிலைக் கரும்பொடு கதிர்மிடைந் தியாத்த
வயல்விளை யின்குள குண்ணாது நுதறுடைத்
தயினுனை மருப்பிற்றங் கையிடைக் கொண்டெனக்
கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக்
கல்லா விளைஞர் கவளக் கைப்பக்
காற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோ லசைநிலை கடுப்ப கற்போ
ரோடா வல்விற் றூணி நாற்றிக்
கூடங் குத்திக் கிடுகுநிரைத்து
வாங்குவில் லரண மரண மாக
வேறுபல் பெரும்படை நாப்பண் வேறோர்
நெடுங்காழ்க் கண்டங் கோலி யகநேர்பு
குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத்
திரவுபகற் செய்யுந் திண்பிடி யொள்வாள்
விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர்
நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக்
கையமை விளக்க நந்துதொறு மாட்ட
நெடுநா வெண்மணி நிழத்திய நடுநா
ளதிரல் பூத்த வாடு கொடிப் படாஅர்
சிதர்வா லசைவளிக் கசைவந் தாங்குத்
துகின்முடித்துப் போர்த்த தூங்க லோங்குநடைப்
பெருமூ தாள ரேமஞ் சூழப்
பொழுதளந் தறியும் பொய்யா மாக்க
டொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி
யெறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்நின்