உச்சிப்படிப்பு

From Wikisource
Jump to navigation Jump to search
சிவசிவா அரிகுரு சிவசிவா
சிவசிவா ஆதிகுரு சிவசிவா
மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம்
அல்லா இல்லல்லா, இறைசூழ் மகிழல்லா சிவசிவா :சிவமண்டலம்
அரி நாராயணகுரு சிவசிவா சிவமண்டலம்
நாதன் குருநாதன் சிவசிவா சிவமண்டலம்
பரலோகமளந்த பச்சைமால் நாராயணர் சிவசிவா சிவமண்டலம்
திருவுக்கும் சடைகுரு சிவசிவா சிவமண்டலம்
செங்கண் திருகுரு சிவசிவா சிவமண்டலம்
சன்னாசி குரு சிவசிவா சிவமண்டலம்
மகாகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம்
அரி சங்காரகுரு சிவசிவா சிவமண்டலம்
மகாகுரு சிவசிவா சிவகுரு மண்டலம்
மண்டலம் குரு மண்டலம் மாயன் குருமண்டலம்
குண்டலம் குருகுண்டலம் சிவசிவா குருகுண்டலம்
சங்கம் நதிகுண்டலம் தரணி குருகுண்டலம்
தரணியது குண்டலம் தரணி புகழ் குண்டலம்
சிவசிவா எங்கும் நிறைஞ்சவர் ஏகமயமாய் நிறைஞ்சவர் சிவசிவா
ஏககுருவாக படைச்சியது நிறைஞ்சவர் சிவசிவா
படைச்சி நிறைஞ்சவர் பாலன் வடிவுகொண்டவர்
வங்காளர் பங்காளர் பாருலோகம் அளந்தவர்
அளந்தவர் திருமால் ஆதிகுரு சன்னாசி
சிவசிவா சன்னாசி செந்தில்வேல்வடிவுமவர்
செந்தில்வேல் சன்னாசி செந்தில்வேலவர்
வடிவும் புகழ் படைச்சவர் மாய நிறமானவரவர் சிவசிவா
கங்கை கண்ணானவர் காரணம் நிறைஞ்சவர்
நிறைஞ்சி நிறைஞ்சவர் ஏகமெல்லாம் நிறைஞ்சவர்
எங்கும் நிறைஞ்சவர் ஏகமாய் நின்றவர்
மண்டலம் புகழ்படைச்ச மாயன்குரு சன்னாசி
சிவசிவா தந்தேநன்னாய் தன்னானாய் தந்தேநன்னாய் தன்னானாய்
சிவசிவா த... ம... அ... சி... ! அரி நன்றாகக் குருவே துணை!
சிவசிவா தெந்திநன்னாய் தென்னானாய் தெந்திநன்னாய் தென்னானாய்
சிவசிவா தன்னானாய் தன்னானாய் தன்னானாய் தன்னானாய்
சிவசிவா தானானோம் தானானோம் தானானோம் தானானோம்
சிவசிவா நானானோம் நானானோம் நானானோம் நானானோம்
சிவசிவா தந்தேனன்னம் தந்தேனன்னம் தந்தேனன்னம் தந்தேனன்னம்
மகாலிங்கம்
சிவாலிங்கம்
குருலிங்கம்
திருலிங்கம்
ஏக்காலிங்கம்
ஏகாலிங்கம்
அரிலிங்கம்
லிங்காலிங்கம்
சொக்காலிங்கம்
சுகலிங்கம்
ஆதிலிங்கம்
அருள்லிங்கம்
அடங்காலிங்கம்