Page:முல்லைப் பாட்டு.pdf/62

From Wikisource
Jump to navigation Jump to search
This page has not been proofread.

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை வேறாகத் தலைவி ஆற்றாமல் வருந்தினாள் என்றல் நெய்தல் என்னும் இரங்கல் ஒழுக்கமாம் ஆகலின், இவ்விரங்கல் ஒழுக்கம் போதாப் பொருளுரைத்தல் நூலாசிரியர் கருத்தொடுமுணுமாகலின் இப்பாட்டுக்கு நேரே பொருள் கூறுதுலாகாது' என்று சொல்லிப் பொற்சரிசை பின்னிய நற்பட்டாடையினைத் துண்டு துண்டாகக் கிழித்துச் சேர்த்துத்தைத்து அவம்படுவார் போல, செய்யுட் சொற்றொடர்களை ஒரு முறையுமின்றித் துணித்துத் துணித்துத் தாம் வேண்டிவாறு பின்னி உரை வரைகின்றார். இனி அவர் நிகழ்த்திய தடையினிப் பரிகரித்துரைக்கின்றாம். வேனிற்காலத் தொடக்கத்தில் தலைவன் தான் பிரியும்போது 'யான் கார்காலந் துவங்குதலும் மீண்டுவந்து உன்னுடன் இருப்பேன்; என் ஆருயிர்ப்பாவாய்! நீ அது பிரிவாற்றாமையால் நிகழுந் துயரைப் பொறுத்திருத்தல் வேண்டும்' என்று கற்பித்த வண்ணமே ஆற்றியிருந்த தலைமகள் அவன் குறித்த கார்ப்பருவம் வரக்கண்டும் அவன் வந்திலாமையிற் பெரிதும் ஆற்றாளாயினாள்; இஃதுலக இயற்கை. இங்ஙனம் ஆற்றாளாகின்றமை கண்ட பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டுவந்து வற்புறுப்பவும் ஆற்றாதுவருந்துந் தலைவி பின் 'நாம் இங்ஙனம் ஆற்றாமை வருந்துகின்றது கணவன் கற்பித்த சொல்லைத் தவறியதாய் முடியும்' என்று நெடுக நினைத்துப் பார்த்து 'அவர் வருந்துணையும் நாம் ஆற்றுதலே செயற்பாலது'என்று தன்னைத் தேற்றிக்கொண்டு கிடந்தாள் என்பது நன்கெடுத்துக் கூறப்படுதலின், இப்பாட்டின்கண் முல்லையொழுக்கமே விளக்கமாய்ச் சொல்லப்பட்டதென்பது அறிவுடையார்க்கெல்லாம் இனிதுணரக் கிடந்தது.