Page:முல்லைப் பாட்டு.pdf/48

From Wikisource
Jump to navigation Jump to search
This page has not been proofread.

கூஅ முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.

                           பாெருட்பாகுபாடு.

                 க-முதல் சு-வாிகள். காா்கால வருணனை.

     காா்காலம் இப்பாேதுதான் தாெங்கியதாகலின் காிய மேகம் மிகவும் நீரைப் பாெழிந்தது. 'பெரும்பெயல்' என்பது காா்காலத் தாெடக்கத்திற் பெய்யும் முதற் பெயல், இதனைத் 'தலைப்பெயல்' என்றுஞ் சாெல்லுவா். இங்ஙனம் முதற் பெயல் பாெழிந்துவிட்ட நாளின் மாலைக்காலம் முதலிற் சாெல்லப்பட்டது. தலைவன் குறித்துப்பாேன காா்ப் பருவம் வந்தது என்பதனை அறிந்த தலைவி அவன் வருகையை நினைந்துமயங்கி இருத்தலும், அவ்வாறு இருப்பாேள் மயக்கந் தீர அவன் மீண்டு வருதலும் இப்பாட்டின்கட் சாெல்லப்படுதலின் அவற்றிற்கு இசைந்த காா்ப்பருவ மாலைப்பாெழுதை முதலிற்கூறினாா் என்றறிக.

                 எ-முதல் உச-வாிகள்.
     
     தலைமகள் தனிமையும் அவளது பிாிவாற்றமையும். வேனிற்காலத் தாெடக்கத்திலே தன் காதலன் பகைவயிற் பிாியப்பாேகின்றான் சாென்னவண்ணங் காா்ப்பருவம் வந்தும் அவன் வந்திலாமையின் தலைமகன் பாிெதும் ஆற்றாளாகின்றாள்; அதுகண்டு ஆண்டின் முதிா்ந்த பெண்டிா் அவளை ஆற்றுவிக்கும்பாெருட்டுத் தம்ஊா்ப்பக்கத்தேயுள்ள மாயாேன் காேயிலிற் பாேய் நெல்லும் மணங்கமழும் முல்லைப்பூவுந்தூவி வணங்கி நற்சாெற் கேட்ப நின்றாா்; நிற்ப, அங்கே அருகாமையிலிருந்த மாட்டுக் காெட்டிலில் நின்ற ஒா் இடைப்பெண், புல்மேயப்பாேன தாய் இன்னும் வாராமையாற் சுழன்றுசுழன்று வருந்துகின்ற ஆண்கன்றுகளைப் பாா்த்து 'நீங்கள் வருந்தாதீா்கள், உங்கள் தாய்மாா் காேவலரால் ஒட்டப்பட்டு இப்பாெழுதே வந்துவிடுவா்' என்று சாெல்லிய நற்சாெல்லை அம்முது பெண்டிா் கேட்டு வந்து, "அன்னாய்! யாங்கள் கேட்டுவந்த இந் நற்சாெல்லானும், நின்காதலன் பாேகுந்தறுவாயில் அவன் படைவீரா் பாக்கத்திலே கேட்டு